Loading...

Articles.

Enjoy your read!

திரைக்கதை - ஜில்.ஜங்.ஜக்

2016

இப்ப நம்ம பாக்குற உலகம் இப்டியே இருக்க போறதில்ல.

விலைவாசிலா ஏறி போயி, பெட்ரோல் விலை எங்கயோ போய்ருச்சு, இதுனால வருசத்துக்கு ஒருமுறை தான் வண்டிய எடுக்குறாங்க. நாட்டுக்கு நாடு தொடர்பு குறஞ்சிருச்சு. இப்படி இருக்கிற உலகத்துல , நல்லது கெட்டதுலாமா பாத்துனு இருப்பாங்க? காசு கோசரம் என்ன வேணாலும் செய்வாங்க. அப்படிப்பட்ட வருசம் தான் 2020.

2020

பொருளாதார வீழ்ச்சியோ, என்னவோ! கடவுளே கைவுட்னு போன மாரி இருந்துச்சு. இப்படி இருந்த உலகத்துல இருந்ததே இரண்டே பேரு, ஒன்னு - கஷ்டப்பட்டு காசு பாக்குறவன், இன்னொருத்தன் - கட்டப்பஞ்சாயத்தில காசு பார்க்கிறவன்.

இப்படி கட்டப்பஞ்சாயத்துல சம்பாரிச்ச ரெண்டு பேருதான் ;

1) தெய்வநாயகம் - (தெய்வா)

2) ராவுத்தர்- (ரோலெக்ஸ் ராவுத்தர்)

ஆரம்பத்துல பிரெண்ட்ஸ் தான், காசு யார விட்டுச்சு, காசுக்காக ரெண்டு பேருக்கு நடுவுல பகை வளர்ந்துருச்சு.

கேடுகெட்ட 2020 , தெய்வாவையும் விட்டு வைக்கல. அவர் மார்க்கெட் சுருங்கி, மிச்சமிருந்தது- நாலு கிலோ சரக்குதான். ராவுத்தராண்டையும் காசு இருந்துச்சு, ஆசை யார விட்டுச்சு, இன்னும் சம்பாரிக்கனும்னு ராவுத்தருக்கு ஆச, 'தெய்வா' சுத்தி வரதையே வேலையா வச்சிருந்தான்.

தெய்வா'ண்டயிருந்த நாலு கிலோ சரக்க போலீஸ்ட்ட மாட்டாம சீனாக்காரன்ட ஒப்படைக்கனும். சரக்கையே காரா ரெடி பண்ணி மருந்து(scientist) ஒரு காரைத் தரான். இந்த காரை எத்துனு போயி சீனாக்காரன்ட்ட கொடுக்கணும். அதுக்கு யார் சரி? மூனு பசங்க!

ஜாகுவார் ஜெகன்- ஜக் (டிரைவர்), கொஞ்சம் ஆர்வக்கோளாறு

ஜங்க் லிங்கம் - ஜங் ( துணை) . ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் எரி கோலி விளையாடுவான்

நாஞ்சில் சிவாஜி- ஜில் ( துணை) நம்ம ஹீரோ. நல்லா வாழைப்பழம் மாரி பேசுவாப்ல. மாண்டரின் மொழிலா சாதாரணம் இவருக்கு.

ஜில், ஜங், ஜக் மூணுபேரும் வண்டி ட்த்துனு கிளம்பிட்டானுங்க. ஜில்லோட பேச்சுத்திறமை நாலயும் , தெய்வா மேல இருந்த பயத்துலயும், தடையெல்லாம் தாண்டி, அவரோட சரக்க போலீஸ் ஆண்ட மாட்டாம போய் சீனாக்காரன்ட குடுத்துடானுங்க.

தெய்வா ஓட சரக்க வாங்கினு அந்த சீனா காரன் இந்த பசங்க(ஜில், ஜங், ஐக்) திரும்பி போறதுக்கு ஒரு காரக் குடுத்தான். அப்புறம், தெய்வாட்ட குடுக்க சொல்லி ஒரு சின்ன டப்பால தங்க பட்டாம்பூச்சிய குடுத்தான். "இது எங்கள் நாடு சார்பாக தெய்வாக்கு பரிசு"னு சொன்னான் அந்தச் சீனா காரன்.

சோக்கா பேசினு மூனு பேரும் அவன் குடுத்த கார எத்துனு, மறுபடியும் தெய்வாவ பாத்து இந்த தங்க பட்டாம்பூச்சிய குடுக்க கிளம்பிட்டானுங்க.

இந்தப் பட்டாம்பூச்சி நியூஸ்- ரோலைக்ஸ் ராவுத்தர் வரைக்கும் போய்ருச்சு, அந்தப் பட்டாம்பூச்சில ஒரு மர்மம் இருக்குனு நினைச்சு அத அந்தப் பசங்க கிட்ட இருந்து வழிப்பறிக்க முடிவு பண்ணிட்டார், ராவுத்தர். தெய்வாவோட வலது கை, இடது கை ( காளி, ஃபை) இரண்டு பேரும் பட்டாம்பூச்சிக்கு ஆசைப்பட்டு ராவுத்தர் ஓட சேர்ந்து அந்த பசங்களாண்ட இருக்குறத பிடிங்கிறலாம்னு நினச்சாங்க.

----------------------------- ---------------------- ------------------------------------

அந்தச் சரக்கு கார எப்படியோ ஒப்படச்ச நிம்மதில, ஜக்'கு புது கார ஓட்டினு வரான், ஏதோ ஜலதோஷம் போல, மூக்கை சொரிஞ்சுனே வரான்.

முன்னாடி உக்கார்ந்துனுக்குர 'ஜில்'லு அந்த தங்க பட்டாம்பூச்சிய பாத்து ரசுச்சிட்டு இருந்தான்.

பின்னாடி உக்காந்துனுருந்த ஜங்'குக்கு கோலி ஞாபகம் வந்திருச்சு. சட்டப் பையில இருந்த கோலிய எடுத்து வண்டிக்குள்ளே விளையாடின்னுயிருந்தான்.

(ராவுத்தர் வழி மறச்சு நின்னுட்டு இருந்த இடத்துக்கு பக்கம் வந்துட்டாங்க இந்த பசங்க)

சந்தோசமா இங்கிலீஷு படங்கள பத்தி பேசினு வராங்க.

ஜங் - கையில இருந்த கோலிய பத்த வச்சுட்டான். வேகமா வண்டி ஓட்டிட்டு போயிட்டு இருந்த ஜக்'குக்கு (ஹச்...னு) தும்மல் வந்துருச்சு,அப்டியே வண்டி நின்றுச்சு. பின்னாடி ஜங்'கு கைல இருந்த கோலி , ஜன்னல் வழியா முன்னாடி போயிட்டு இருந்த லாரில பட்டுருச்சு. அது சாதாரண லாரி இல்ல, சிலிண்டர ஏத்திட்டு போன லாரி.

அது எதுவுமே தெரியாத அந்த லாரி டிரைவர், வேகமா ஓட்டினு போய்டான். ராவுத்தர் , அவர் ஆளுங்க , ஃபை, காளி நின்ன இடத்துக்கு போய்டாரு இந்த லாரி டிரைவர்.

அவங்க வழி மறச்சு நிக்கிரத பாத்துட்டு , அவங்க நின்ன இடத்துல வண்டிய நிறுத்தின்னு, ரோட்டுக்கு இந்தாண்ட இருந்த கருவேல மரத்துக்கிட்ட சிறுநீர் கழிக்க போயிட்டாரு - டிரைவர்

லாரி பின்னாடியே வந்த பசங்க, ராவுத்தர், அவர் ஆளுங்கள பாத்துட்டாங்க, ஜில் கத்துனான் - "நிறுத்து டா வண்டிய"... கேட்டது - பல சிலிண்டர் வெடிச்ச சத்தம். என்னப்பா அங்க சத்தம்னு திரும்பி பாக்குறாரு டிரைவர், தகரம் எல்லாம் வானத்துல பறந்துனு இருக்குது .

சிலிண்டரோட சேர்ந்து பறந்தது ராவுத்தர், ஃபை,காளி, அவங்க ஆளுங்க. இந்த பதட்டத்துல ஜக்'கு வண்டிய மரத்துல போய் மோதிட்டான். மோதுன வேகத்துல டப்பா திறந்து தங்க பட்டாம்பூச்சி பறந்திருச்சு. இந்த பட்டாம்பூச்சி- தேடி போய் தெய்வா'வ கொன்றுச்சு. அப்டியே எல்லா நாட்டுக்கும் பறந்திருச்சு. ஐக்'கு தும்முன தும்மல் எல்லாரும் தும்ம ஆரம்பிச்சுட்டாங்க. உலகம் முழுக்க தும்மல் தான்.

அதுதான் லாஸ்ட் டே(last day)!(லாக் டவுன்...) அதவாது கடைசி நாள்! எல்லாரும் வெளியில சுத்துனதுக்கு கடைசி நாள் {ரெட் ரோடு, சிலிண்டர் லாரி ,...}

பசங்க காரை மரத்துக்கிட்ட நிறுத்திட்டாங்க. "வாழ்க்கைல ஒரு பெரிய வேலைய முழுசா முடிக்கனுமனா, ஒன்போது சின்ன வேலைங்கள பண்ண யோசிக்க கூடாது!" என்றான் ஜில் . பசங்களோட அடுத்த வேலை - ஷூட் தி பட்டாம்பூச்சி { Shoot the butterfly}. ஆம், அந்தச் சீனாக்காரன் குடுத்த பட்டாம்பூச்சிய ஒழிக்கிறது.

2020 எல்லாருக்கும் ஒரு பாடம் கத்துத்தர வருசமா தான் இருக்கும்!

மச்சி யார் ஹீரோயினு ?

ஹிரோயினியா!

ஹீரோயினெல்லாம் வேணாம் மச்சி

ஹீரோயின்னாலே பிரச்சனை ; ஹீரோயினெல்லாம் வேணாம்...

செக் ஒன் டூ த்ரீ

பிம்பிலிகா பில்லாப் பீ பீ ஏய்…. ஏய்…. ஏய்…..

திஸ் சாங்க்ஸ் ஃபார் யூ மை லவ்

பிம்பிலிகா பில்லாப் பீ பீ

கண்ணாடி பளிச்சுக் காட்டுது... ஏய்...

நான் காதப்பொத்திக்க நோ நோ ... நோ நோ நோ...

என் மம்மி பாவம்... சாரிம்மா!

----------------------------------------------------------------------------------------------------------

இதுவே , எனது ஜில் ஜங் ஜக்! ;

Tagged in : change, TWIST, Movie, HERO,

   

Similar Articles.