Loading...

Articles.

Enjoy your read!

தையல்

”மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்

செய்திட வேண்டும் "

                            

என்று பாடியுள்ளார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. ஆனால் அத்தகைய மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் பலரும் தம் பிறப்பு முதல் இறுதி வரை தன்னுடைய வாழ்நாளில், அவளைச் சுற்றி ஏராளமான போற்றுதலையும், தூற்றுதலையும் சந்தித்து கொண்டு இருக்கிறாள்

 

பெண்ணை எப்போதும் பூவோடும், நிலவோடும், நதியோடும், காற்றோடும், இசையோடும் ஒப்பிடுவார்கள். இதன் மூலம் பெண்களின் அழகையும், தியாகத்தையும் பாராட்ட மறக்காத மனிதர்கள் அவர்களின் வலிமையைப் பாராட்ட பல நேரங்களில் மறந்துவிடுகிறார்கள்

 

ஆண்களை விடப் பெண்கள் பலவீனமானவர்கள் என்ற கூற்று இன்றும் நம்மைச் சூழ்ந்து நிற்கிறது. தனது உயிரையே பணயம் வைத்து, ஆயிரம் வலியை அனுபவித்துத் தன் குழந்தையின் முகத்தைப் பார்க்கும் போது சிரிக்கும் பெண்ணின் வலிமைக்கு இங்கு ஈடுஇணை உண்டோ.

 

பதினைந்து வயதில் தாலிபான்களின் சட்டங்களை மீறி பள்ளி சென்றாள் மலாலா. அதற்காக அவள் முகத்தைக் குண்டுகளால் துழைக்கச் செய்தார்கள். உயிருக்குப் போராடி ழுந்து வந்த மலாலா "நான் என்னைச் சுட்டவர்களை சந்திக்க வேண்டும். அவர்களிடம் பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி பேச வேண்டும்" என்றாள். இவளிடம் இல்லாதா வலிமையா?

 

முன்பு "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு" என்றார்கள். தற்போது பல பெண்கள் படித்துவிட்டு அடுப்பூதிக் கொண்டு இருக்கின்றனர். பல்துறைகளில் சாதித்து வரும் 40 சதவீத பெண்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தாலும், மீதமுள்ள 60 சதவீத பெண்களின் நிலை வருத்தத்திற்குரியதாகதான் இருக்கிறது.

 

இதற்கான தீர்வு விக்ரமாதித்தன் கதைகளில் வருவது போல் ஏழு தீவுகள் கடந்து உள்ள கிளியின் உயிரில் இல்லை. இந்தச் சமூகத்திடம் தான் உள்ளது. "பெண்பிள்ளையா சரி, அடுத்தது ஆண்பிள்ளையாக அமையும்", "பெண்பிள்ளையை எதுக்கு வெளியூருக்கெல்லாம்  அனுப்பிப் படிக்கவச்சுகிட்டு", "பெண்களைப் படிக்க வைப்பதே அவர்களின் பிள்ளைகளுக்குப் பாடம் கற்று தர மட்டுமே". இது போன்ற கூற்றுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலே போதும்

 

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடந்துவந்தோம்;

”எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி”.

 

என்றார் பாரதி. மிதாலிராஜ், மேரிகோம், இந்திராகாந்தி, பாத்திமாபீவி, துர்கா பேனர்ஜி, அன்னை தெரசா, கிரண்பேடி, ப்ரதிபா பட்டேல் எனப் பலரும் இதை நிருபித்து விட்டார்கள். எனினும் இந்தச் சமூகத்தில் பலர் பெண் வலிமையானவள் என்ற கருத்தை ஏற்க மறுக்கத்தான் செய்கிறார்கள். முதலில் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பெண்ணுரிமை என்பதே ஆணுக்கு எதிரான கருத்து என்பது உடைப்பட வேண்டும். குடும்ப வரையறை, சமூக வரையறை எனக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கிச் சுயத்தை, சுதந்திரத்தைத் தொலைத்து இந்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் பெண்ணுக்கு அவளின் வலிமையை உணர்ந்து அவளுடைய உரிமையை இச்சமூகம் அவளுக்கு வழங்குமா?????

 

"நிமிர்ந்து

நிற்பதெல்லாம் பலம் என்றோ

வளைந்து கொடுப்பதெல்லாம் பலவீனம் என்றோ கருதாதீர்கள்

வேலை விட, வளைந்து கொடுக்கும் வில் அம்பு

அதிகத் தூரம் பாயும்"

 

 

Tagged in : Thaiyal, Valimai, Bharathi,

   

Similar Articles.