Loading...

Articles.

Enjoy your read!

என் தாய்மொழி தமிழ் !

என்  உணர்வுகளைக் கேட்கவைத்த தூதுவனே,
நான் பிறந்த முதல்நாளில் இருந்து என் செவியோரம் பாய்ந்து தினமும்
என்னை உயிர்பித்துக்கொண்டிருக்கும் பேரமுதமே!

உணர்ச்சிகளை உணரவைக்கும் உயர்ந்த வேலையைச் செய்துகொண்டிருக்கும் உன்னை உலகமே போற்றுகையில்,
உன் பிள்ளைகள் தாய்ப்பாசமிழந்து மதியாத நிலை வந்ததேன்?
வேர்ச்சொல்லே இல்லாத மொழிகளெல்லாம்
வேந்தரென வேடமிட்டு புவியாளுகையில்
மொழிகளுக்கே வேரான நீ முடக்கப்பட்டதேன்?

உலகமயத்தின் தாக்கத்தால் வந்த மோகமெல்லாம் பறந்துசென்றது
உன் பிள்ளைகள் உன் மடியில் தவழ்கின்றன,
தனித்தனி சொல்லுக்கும் தனிப்பொருள் கொண்ட தனிமொழியே,
ஒவ்வொரு வார்த்தைக்கும் பலப்பொருள் கொண்ட பொன்மொழியே,

காலம் மாறினாலும் இனிமை மாறாத தேன்மொழி நீ !
ஞாலம் எங்கும் அறியப்பட்ட தொன்மொழி நீ !
திராவித்திற்கு அடையாளமான தென்மொழி நீ !
ஆதியும் அந்தமும் விரிந்து பிறந்திருக்கும் செம்மொழியும் நீ !

விண்ணையும் மண்ணையும் இணைக்கும் வல்லமையையும் ,
பல வியக்கவைக்கும் சாதனைகளின் களஞ்சியமுமாய்,
அன்பையும் பண்பையும்
அறிவையும் அறத்தையும்

உன்னால் மட்டுமே சொல்லால், பொருளால்,
வார்த்தையால், பாடலால்,
கவிதையால், கதையால்
இனிமையும்  தனிமையும்
எளிமையுடன் உணரவைக்க முடியும்.

இதனால் தான் நீ உலகம் போற்றும் மொழி ஆனாயோ!

Tagged in : Tamil, பவித்ரா,

   

Similar Articles.